பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்காது... மத்திய அரசின் மீதான கோபமே கருத்து கணிப்புகளின் வெளிப்பாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆங்கில செய்தி நிறுவனங்கள் , கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எதுவும் பாஜக தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறவில்லை. அந்தளவுக்கு மத்திய அரசு மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதையே இது காட்டுகிறது.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இங்கு 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் பெரும்பாலான கணிப்புகளில் எந்த கட்சியும் தனி பெரும்பான்மை வகிக்காது என்றே வந்துள்ளன.

எக்ஸிட் போல்ஸ்

எக்ஸிட் போல்ஸ்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என வந்துள்ளன. இதனால் பாஜக பெறும் மகிழ்ச்சி அடைந்தது. டைம்ஸ் நவ் டுடேஸ் சாணக்யா சேனல் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 120 இடங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது.

100-க்கும் மேல்

100-க்கும் மேல்

அதுபோல் திக்விஜயா டிவியில் பாஜகவுக்கு 103 முதல் 107 இடங்கள் வரை பெறுவர். மேலும் ஏபிபி சி வோட்டரிலும் 107 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

ரிபப்ளிக் ஜன் கீ பாத்

ரிபப்ளிக் ஜன் கீ பாத்

நியூஸ் எக்ஸ் சேனலில் 102 இடங்கள் முதல் 110 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் ரிபப்ளிக் ஜன் கீ பாத் சேனலில் 95 முதல் 114 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது கருத்து கணிப்புகள்

என்ன சொல்கிறது கருத்து கணிப்புகள்

ஜிஎஸ்டி, நீட் தேர்வு என அதிருப்திகள் இருந்தாலும் காங்கிரஸை காட்டிலும் பாஜகவுக்கு அதிக அளவு இடங்கள் கிடைத்துள்ளன. என்னதான் காங்கிரஸை காட்டிலும் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும் அக் கட்சி தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த கருத்து கணிப்புகளும் கூறவில்லை. பாஜக தலைவர்கள் கூறிக் கொள்வதை போல் அக்கட்சிக்கு தனிபெரும்பான்மை தர யாரும் முன்வரவில்லை என்றே தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Most of the Exit polls dont say that BJP will get simple majority and form new government in Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற