For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனாவை விரட்டுவதாக் கூறி பெண் அமைச்சர் ஒருவர் கைதட்டி பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பைக் குறைக்க தெய்வத்தை வலியுறுத்தும் விதமாக விமான நிலையத்தில் பூஜை நடந்தது. இதில் அந்த மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர் பங்கேற்றார்.

பாட்டு பாடி

பாட்டு பாடி

அஹில்யாபாய் ஹோல்கரின் சிலைக்கு முன் அமர்ந்து கொண்டு கை தட்டி, பாட்டுப் பாடி கொரோனாவை விரட்டிக் கொண்டிருந்தார். உஷா தாக்கூரின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மேலும் அவர் மாஸ்க் அணியாமல் பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கை

வாழ்க்கை

இதுகுறித்து உஷா தாக்கூர் கூறுகையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி நான்தான். நான் எப்போதும் அனுமன் சாலிசாவை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் கடைப்பிடிக்கும் ஆன்மீக வாழ்க்கையினால் நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு அதிகம் உள்ளது.

24 மணி நேரத்தில்

24 மணி நேரத்தில்

மாட்டுச் சாணம் 24 மணி நேரத்திற்கு நீடித்து நிற்கும் கிருமிநாசினி ஆகும் என்றார். உஷா தாக்கூர் மாஸ்க் அணியாமல் பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,986 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில்

இதன் மூலம் மாநிலத்தில் 3,32,206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 32,707 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் பலியாகிவிட்டனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,160 ஆகும்.

English summary
Madhya Pradesh Minister Usha Thakur performs puja to get rid of Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X