கலர்ப்பொடி தூவியை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வரவேற்ற எம்பிக்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட எம்பிக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி ஹோலியை கொண்டாடினர்.

நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட எம்பிக்கள் சந்தனத்தைப் பூசியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MPs celebrate Holi in Parliament premises

மேலும், ஹோலிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஹோலி வண்ணங்கள் அலங்கரிக்கும் வசந்த விழா நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை தன்மையை அடையாளப்படுத்துகிறது. இந்த விழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

MPs celebrate Holi in Parliament premises

குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், "வசந்த கால வருகையைக் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை இந்தியா முழுவதும் வகுப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவினைகளையும் கடந்து கொண்டாடப்படுகிறது. இவ்விழா தேச ஒற்றுமையின் அடையாளம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+