குடும்பத்தைக் காப்பாற்ற திருடியாக மாறிய போலீஸ்காரர் மனைவி!
மும்பை: குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிளின் மனைவியை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் உஷா கத்கர். 40 வயதாகும் இவரது கணவரது பெயர் கிஷன் கத்கர். இவர் குர்லா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார்.

அக்டோபர் 3ம் தேதி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 58 வயதான அசோக் ராவ்ஜி காம்ப்ளே என்பவரிடமிருந்து ரூ. 16,000 ரொக்கப் பணம், செல்போன் ஆகியவை அடங்கி பையைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டார் உஷா. சம்பவம் நடந்தபோது காம்ப்ளே மது போதையில் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரால் உஷாவைப் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அங்கிருந்த ரகசியக் கேமராவின் உதவியால் உஷாவை அடையாளம் கண்ட போலீஸார் வதலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர். விசாரணையில்தான் அவர் போலீஸ்காரரின் மனைவி என்று தெரிய வந்தது.
கிசன் கத்கர் கடந்த 2011ம் ஆண்டு குடிபோதையில் தன்னிடமிருந்த துப்பாக்கி வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் உஷா என்று தெரிய வந்துள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications