For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்... அதிகாலை 4 மணிக்கு உணவோடு காத்திருந்த இஸ்லாமியர்கள்!

அதிகாலை 4 மணிக்கு விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் காத்து கிடந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ

    மும்பை: மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம் நெகிழ வைத்தது.

    விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கிலிருந்து தொடங்கிய பேரணி நேற்று மும்பையை வந்தடைந்தது. இடதுசாரிகளின் விவசாய அமைப்பான, 'அகில இந்திய கிஷான் சபா' இந்த போராட்டத்தை முன்னெடுத்தது.

    மும்பை எல்லையில்

    மும்பை எல்லையில்

    வழி நெடுகிலும் விவசாயப் பேரணிக்கு ஆதரவு அதிகரித்தபடியே இருந்தது. கடந்த 6-ஆம் தேதி நாசிக்கில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி 5 நாட்களில் சுமார் 180 கி.மீ தூரத்தை கடந்து தானே-மும்பை எல்லைக்கு நேற்று வந்தடைந்துள்ளது.

    ஆதரவு அதிகரிப்பு

    ஆதரவு அதிகரிப்பு

    மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டசபையை இன்று விவசாயிகள் முற்றுகையிட இருந்தனர். சுமார் 15000த்துக்கும் அதிகமானோரால் ஆரம்பிக்கப்பட்ட பேரணிக்கு சிவசேனா, மகாராஷ்டிரா நவ நிர்மான், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. விவசாயிகள் நடைபாதையாக வரும் வழியெங்கும் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்தபடியே இருந்தது.

    வருகை அதிகரிக்கக் கூடும்

    வருகை அதிகரிக்கக் கூடும்

    மும்பையில் இன்று பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். இவர்களின் வருகை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சகோதரத்துவத்தின் உச்சகட்டம்

    சகோதரத்துவத்தின் உச்சகட்டம்

    இவர்களின் பைகுல்லா சந்திப்பை அடைந்த போது அங்கு ஏராளமான முஸ்லிமி சகோதரர்கள் காலை 4 மணி முதல் உணவு, தண்ணீர், பேரிச்சம் பழம், பிஸ்கெட்டு ஆகியவற்றுடன் காத்திருந்தனர். இதை பார்க்கும் போது சகோதரத்துவத்தின் உச்சகட்டமான செயலாகவே கருதப்படுகிறது.

    English summary
    When the Long March of Kisan Sabha reached Byculla junction, Mumbai a large group of Muslim brothers led by the Rahmani group distributed water, dates and biscuits to the marching peasants. It was an extraordinary act of solidarity, which the peasants reciprocated with loud slogans of Lal Salam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X