For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ஔரங்கசீப் சாலைக்கு அப்துல்கலாம் பெயர்... முஸ்லீம் இயக்கம் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி :ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்ற மாநாரட்சியின் அறிவிப்புக்கு முஸ்லீம் இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சிறப்பிக்கும் வகையில், டெல்லியில் அவரது இல்லம் அமைந்திருந்த ஔரங்கசீப் சாலையின் பெயர் அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அண்மையில் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.

aurangazeb road

இந்த நிலையில், அவுரங்க சீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டியதற்கு முஸ்லீம் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து இந்திய முஸ்லிம்கள் நல கட்சித் தலைவரும், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினருமான இலியாஸ் கூறியுள்ளதாவது...

டெல்லி அவுரங்கசீப் சாலையை அப்துல்கலாம் சாலை என்று பெயர் மாற்றியது திட்டமிட்ட செயல். இதோடு இது நின்றுவிடாது. மராட்டிய மாநிலத்தில் ஔரங்கசீப் நினைவிடம் அமைந்துள்ள அவுரங்காபாத் மாவட்டத்தின் பெயரை மாற்றுவோம் என்று சிவசேனா கூறியுள்ளது.

வரலாற்றில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் பேரரசர்களின் பெயர்களை கொண்டுள்ள நகரங்கள், சாலைகள் பட்டியலை அவர்கள் வைத்துள்ளனர். ஔரங்கசீப் இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல, அவர் பல கட்டிடங்களுக்கும், கோவில்களுக்கும் நிலம் வழங்கிய மதசார்பற்றவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Muslim outfits on Monday objected New Delhi Municipal Council's (NDMC) decision to rename Aurangzeb Road after late President APJ Abdul Kalam, terming it as a "deliberate" move that is "likely to set the trend of rechristening other cities/streets distorting history".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X