For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்வு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது.

24 சதவிகிதம் உயர்வு

24 சதவிகிதம் உயர்வு

நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் வளர்ச்சி விகிதம் 24 சதவீதமாக உள்ளது. இது தேசிய மக்கள்தொகை சராசரியை (18 சதவீதம்) விட அதிகமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் 67 சதவீதத்தில் இருந்து 68.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள்தொகை 11.9 சதவீதத்தில் இருந்து, 13.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு, மிக விரைவான உயர்வை அஸ்ஸாம் கண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது மாநிலத்தில் 30.9 சதவீதம் இஸ்லாமியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பில் 34.2 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்

சட்டவிரோத குடியேற்றம்

அஸ்ஸாம் மாநிலம், கடந்த 30 வருடங்களாக வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் பிரச் னைகளைச் சந்தித்து வருகிறது. இந்தத் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்

வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வருபவர்களால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மேற்கு வங்காளமும் காணப்படுகிறது. இந்த மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

27 சதவிகிதம்

27 சதவிகிதம்

மாநிலத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்கள்தொகை 25.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் 27 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய இஸ்லாமிய மக்கள்தொகை (.8 சதவீதம்) சராசரியைவிட இருமடங்கு அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா - கோவா

கேரளா - கோவா

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மற்ற மாநிலங்களியிலும் இஸ்லாமிய மக்கள்தொகை குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது.

கேரளாவில் 24.7 சதவீதத்தில் இருந்து, 26.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கோவா மாநிலத்திலும் 6.8 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஹரியானா - டெல்லி

ஹரியானா - டெல்லி

ஹரியானாவில் 5.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், டெல்லியில் 11.7 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே 8.8. சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அரசியல்வாதிகள் அறிவுறுத்தல்

அரசியல்வாதிகள் அறிவுறுத்தல்

இஸ்லாமிய மக்கள் தொகை உயர்ந்து வருவதை அறிந்துதான், இந்துக்களும் 5 பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சாமியார்களும், அமைச்சர்களும் வலியுறுத்துக்கின்றனரோ?

English summary
The latest census data on the population of religious groups, set to be released shortly, shows a 24% rise in the Muslim population between 2001 and 2011, with the community's share of total population rising from 13.4% to 14.2% over the 10-year period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X