For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ்

By BBC News தமிழ்
|
Indian Muslims
AFP
Indian Muslims

இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் ''இஸ்லாமியர்கள் மிகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும்'' இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்து இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், இஸ்லாமியர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்காக அமல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ள முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், பாஜகதான் இஸ்லாமியர்களுக்கு ''மிகப்பெரிய நலம் விரும்பி'' என்று தெரிவித்துள்ளது.

'நிவேதன் பத்ரா' என்ற துண்டறிக்கையை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் விநியோகிப்பதற்காக இந்த அமைப்பு தயார் செய்து வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலைக்காக பதிவு செய்துள்ள 75 லட்சம் பேர்: ஆண்களைவிட பெண்கள் அதிகம்

வேலைவாய்ப்பு - சித்தரிக்கும் படம்
Getty Images
வேலைவாய்ப்பு - சித்தரிக்கும் படம்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75,31,122 பேர் காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கூறியுள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

அவர்களில் ஆண்கள் 35 ,35, 992 பேர்; பெண்கள் 39,94, 898 பேர் பெண்கள், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 31-ந்தேதிவரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1,39 414 பேர் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியால் பக்கவாதம் சரியானதா? - ஆய்வு செய்யக் கோரிக்கை

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
Getty Images
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் பேசுவதும், நடப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொக்காரோவின் சால்கதி கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதாகும் துலார்சந்த் முண்டா

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கி பக்கவாதத்துக்கு உள்ளாகி இயங்கும், பேசும் திறனை இழந்திருந்தார்.

ஜனவரி 4ஆம் தேதியன்று அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அவருக்கு அங்கன்வாடி மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பொக்காரோ நகரின் மருத்துவர் ஜிதேந்திர குமார், இது குறித்து ஆராய ஒரு மருத்துவக் குழு அமைக்க வேண்டும் என தான் அரசுக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

BBC Tamil
English summary
Muslims are most secure and happy under BJP rule, says RSS Muslim body
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X