நான் என்ன மோடியா? பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்டவனா? வயநாட்டில் விளாசிய ராகுல்!
வயநாடு: வயநாடு அல்லது ரேபரேலி எந்த தொகுதியின் எம்பியாக நீடிப்பது என்பது குறித்து மக்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்; நான் மோடியைப் போல பரமாத்மா கிடையாது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார். அதேபோல உ.பி.யின் ரேபரேலி லோக்சபா தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 390030 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இதனையடுத்து ராகுல் காந்தி எந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டு எம்பியாக நீடிப்பார்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகும் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என்பதும் ஆரூட தகவல்கள்.
இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதிக்கு ராகுல் காந்தி வருகை தந்து தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நான் வெற்றி பெற்ற வயநாடு, ரேபரேலி இரு தொகுதி மக்களுமே மகிழ்ச்சி அடையும் வகையில் முடிவெடுப்போம். வயநாடு அல்லது ரேபரேலி எம்பியாக நீடிப்பது குறித்து மக்களுடன் ஆலோசித்துவிட்டுதான் முடிவெடுப்போம்.
பிரதமர் மோடி தமக்கு பரமாத்மா வழிகாட்டுவதாக சொல்கிறார். ஆனால் நான் ஒரு சாமானியன். சாதாரண மனிதன். எனக்கு பரமாத்மா எல்லாமே என் மக்கள்தான். ஆகையால் எங்கள் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்றுக் கொண்டு கட்டுப்பட்டு செயல்படுவேன்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் பேசினர். ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பிரதமர் மோடியே அரசியல் சாசனத்தை தொட்டு வணங்குகிறார். அரசியல் சாசனப் புத்தகத்தின் முன்பாக மண்டியிட்டு வணங்கினார் மோடி. ஆம் மக்கள் இந்த நாட்டில் வெறுப்பை விதைத்த சக்திகளை தேர்தலில் தோற்கடித்துவிட்டனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications