நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு
கொல்கத்தா: பாஜகவின் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி தொடங்கி அனைத்து அமைச்சர்களும் வங்கத்தில் முகாமிட்டிருந்தனர்.

மேற்கு வங்க தேர்தல்
இருப்பினும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜகவால் முடியவில்லை. அங்கு பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக 213 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிய அமைத்தது. இருப்பினும், திரிணாமுல் தொண்டர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

மம்தா தோல்வி
இந்தத் தேர்தலில் திரிணாமுல் தலைவர் மம்தா நந்திகிராம் தொகுதியில் களமிறங்கினார். அவருக்கு எதிராக ஒரு காலத்தில் மம்தாவின் வலது கரமாக இருந்த சுவேந்து அதிகாரி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். பிரசாரம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை நந்திகிராம் தொகுதியில் அனல் பறந்தது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுவேந்து அதிகாரி சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு
இருப்பினும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக்கக் குற்றஞ்சாட்டிய மம்தா, சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராகக் கொல்கத்தா உயர் நீதிமன்ற்தித்ல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முதலில் நீதிபதி கவுசிக் சந்தா விசாரிப்பதாக இருந்தது. இருப்பினும், அவர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்தார்.

நீதிபதி உத்தரவு
இதையடுத்து இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி ஷம்பா சர்கார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications