For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் காந்தியை சந்தித்தார் சித்து.. நாளை காங்கிரஸில் இணைகிறார் !

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பஞ்சாபில் பிரபல அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். கடந்த 2004 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார். ஆனால், அடுத்த மக்களவை தேர்தலில் அவரது அம்ருத்ஸர் தொகுதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு போனது. அப்போது முதல் பாஜக மீது அதிருப்தியாக இருந்தவருக்கு ஆம் ஆத்மி மீது பார்வை திரும்பியது.

Navjot Singh Sidhu meets Rahul Gandhi

டெல்லியில் தனி மெஜாரிட்டியுடன் ஆளும் இக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் பஞ்சாபில் 3 எம்பிக்கள் உள்ளனர். இதனால், ஆம் ஆத்மியுடன் இணைய அடித்தளம் இட்டவர், ஏப்ரல் 28-ல் குடியரசு தலைவரால் மாநிலங்களை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அடுத்து மத்திய அமைச்சரவையிலும் சித்துவிற்கு இடம் கிடைக்கும் என கூறப்பட்டது.

இதைவிட அதிகமாக முதல் அமைச்சராக ஆசைப்பட்டவர் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் 12 ஆண்டு இருந்த பாஜகவில் இருந்து கடந்த ஜூலை 18-ல் வெளியேறியதுடன் எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார் சித்து.

பாஜகவில் இருந்து வெளியேறியவர் தற்போது காங்கிரஸில் சேரவேண்டி பேச்சுவாத்தை நடத்தி வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.

பாஜகவின் எம்எல்ஏவாக இருந்த சித்துவின் மனைவியான டாக்டர்.நவ்ஜோத் கவுர் சித்து தன் பதவியை ராஜினாமா செய்து ஏற்கனவே காங்கிரஸில் இணைந்து விட்டார். இன்னும் தன் கட்சியில் சேராத சித்துவிற்கு காங்கிரஸ் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தொகுதி ஒதுக்கியுள்ளது.

இதனிடையே சித்துவை, துணை முதல்வராக முன்னிறுத்தவும் காங்கிரஸ் யோசனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாளை சித்து காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 4-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக ஆதரவுடன் சிரோமணி அகாலி தளம் ஆட்சி நிலவுகிறது.

English summary
Former BJP lawmaker Navjot Singh Sidhu met Congress vice president Rahul Gandhi in New Delhi today amid speculation of the cricket-turned-politician joining the Congress soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X