ஜும்மா மசூதியில் ஷெரீப் தொழுகை.. புகாரியையும் சந்தித்தார்
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று காலை ஜும்மா மசூதிக்குச் சென்று தொழுகை செய்தார். மேலும் ஜும்மா மசூதியின் இமாம் சையத் அமது புகாரியையும் அவர் சந்தித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புகாரி ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முகலாய அரசர் ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்டது ஜும்மா மசூதி. அத்தகைய பாரம்பரியம் வாய்ந்த மசூதியில் நவாஸ் ஷெரீப் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திங்கள்கிழமையன்று ஷெரீப் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இன்று முற்பகல் மோடியும், ஷெரீப்பும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பு 25 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது இரு தரப்புஉறவுகளை வலுப்படுத்துவது, வாஜ்பாய் காலத்தில் விட்டுச் செல்லப்பட்ட நட்பு பாலத்தை மீண்டும் சரி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசப்படும் என்று தெரிகிறது. மேலும் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட சதிகாரர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஷெரீப்பிடம் மோடி வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications