ஒடிஷா: சிவன் கோவிலை சுத்தம் செய்து நந்தியை ஆரத்தழுவி வணங்கிய பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு!
புவனேஸ்வர்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒடிஷா பழங்குடி இன தலைவர் திரெளபதி முர்மு இன்று சிவாலயத்தை சுத்தம் செய்து வழிபாடு நடத்தினார்.
Recommended Video
நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
பழங்குடி இன தலைவரான திரெளபதி முர்மு, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஒடிஷா மாநிலம் கொண்டாடி மகிழ்கிறது. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று இரவே திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் முழுமையாக திரெளபதி முர்முவையே ஆதரிக்கும்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் இன்று காலை ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராய்ரங்பூர் சிவாலயத்துக்கு சென்றார் திரெளபதி முர்மு. அங்கு சிவாலயத்தை கூட்டி சுத்தம் செய்தார். பின்னர் கைகளை கழுவிவிட்டு அங்கிருந்த நந்தியை ஆரத்தழுவி வழிபாடு நடத்தினார். அதேபோல் ஜகந்நாதர், ஹனுமான் ஆலயங்களுக்கும் திரெளபதிர் முர்மு சென்று வழிபாடு நடத்தினார். ராய்ரங்பூரில் உள்ள பிரம்மகுமாரிகள் இல்லத்துக்கும் திரெளபதி முர்மு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications