For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக 32; திமுக -5; பாஜக அணி-2 ; காங்கிரஸுக்கு முட்டை: என்.டி.டி.வி. எக்ஸிட் போல்

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 32 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்று என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதற்கு முன்னதாக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதில் தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும்; திமுக 2 வது இடத்தையும் பாஜக அடுத்த இடத்தையும் பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் என்.டி.டி.வி. தொலைக்காட்சி நேற்று இரவு தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டன.

அதிமுக 32

அதிமுக 32

அதில் தமிழகத்தில் அதிமுக அதிகபட்சமாக மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 32ஐ கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட 23 இடங்கள் கூடுதலாகும்.

திமுகவுக்கு 5

திமுகவுக்கு 5

திமுக மொத்தம் 5 இடங்களைக் கைப்பற்றும்.

பாஜக அணி 2

பாஜக அணி 2

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களைக் கைப்பற்றும்.

காங்கிரஸுக்கு முட்டை

காங்கிரஸுக்கு முட்டை

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்கிறது என்.டி.டிவி. எக்ஸிட் போல்.

டைம்ஸ்நவ் டிவி

டைம்ஸ்நவ் டிவி

முன்னர் டைம்ஸ் நவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.,வுக்கு 31 தொகுதிகளும், தி.மு.க.,வுக்கு 7 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தந்தி டிவி

தந்தி டிவி

தந்தி டிவியோ அதிமுக 24, திமுக 5, பாஜக கூட்டணி 4 இடங்களை பிடிக்கும் தெரிவித்தது.

ஹெட்லைன்ஸ் டுடே டிவி

ஹெட்லைன்ஸ் டுடே டிவி

இதன் எக்ஸிட் போல் முடிவில், அ.தி.மு.கவுக்கு 20 முதல் 24 தொகுதிகள்; தி.மு.கவுக்கு 10 முதல் 14 தொகுதிகள்; பாஜக கூட்டணிக்கு 5 தொகுதிகளும், காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

சிவோட்டர்

சிவோட்டர்

சி ஓட்டர் நிறுவனத்தின் எக்ஸிட் போல் அதிமுக 27; திமுக 6; பாஜக கூட்டணி- 5 (பாஜக 2, தேமுதிக 1, பாமக 1, மதிமுக 1) இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 3வது இடம்

தேசிய அளவில் 3வது இடம்

இதுவரை தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ்தான் அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டு வந்தது. எக்ஸிட் போல் முடிவின் படி அதிமுக 3வது இடத்தைப் பெறும்

English summary
Narendra Modi, the BJP's prime ministerial candidate got a feeler from Tamil Nadu when an AIADMK leader said his party chief J Jayalalithaa would "like close ties" with him. If that is an offer of support at the Centre should the BJP-led alliance form government, NDTV's exit poll suggests it's a good one. Ms Jayalalithaa, Tamil Nadu chief minister, looks set to sweep her state with about 32 of its 39 Lok Sabha seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X