ஆண்டுதோறும் காணாமல் போகும் 4000 குழந்தைகள்.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ஆசிரியரின் நேரடி அனுபவம்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆண்டுக்கு நான்காயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய அளவில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அதிக அளவில் மைனர் பெண்கள் காணாமல் போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குழந்தைக் கடத்தலிலும் மேற்கு வங்காளமே முதலிடத்தில் உள்ளது. 2010-ல் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 332 ஆக இருந்தது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2351 ஆக அதிகரித்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகளில் 61 சதவீதம் பேர் சிறுமிகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
2010-14 காலகட்டத்தில் நாடுமுழுவதும் 3.85 லட்சம் குழந்தைகள் காணாமல் போனார்கள். இவர்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள். கடந்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் காணாமல் போன சிறார்களில் 70 சதவீதம் பேர் சிறுமிகள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

வங்கதேச எல்லை
காணாமல் போவோரில் 40 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமலேயே போவதாக தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் , வங்காள தேச எல்லையிலுள்ள நாடியா மாவட்டத்தில் மட்டும், 2017 ஆம் ஆண்டில் காணாமல் போன 291 குழந்தைகள் அறிக்கையிலிருந்து 2018 ல் 474 ஆக அதிகரித்துள்ளது. வங்காளத்தில் மட்டும் அதிக அளவில் குழந்தைகள் காணாமல் போவது நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் காணாமல் போய், திரும்ப வராமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

ஆசிரியரின் டைரிக்குறிப்பு
'Field Notes from a Waterborne Land' என்ற நூலை பரிமளா பட்டாச்சாரியா எனும் ஆசிரியை எழுதி இருக்கிறார். அதில், கொல்கத்தா நகரை சுற்றி தான் சந்தித்த குழந்தைகள், கல்வி சூழல், காணாமல் போகும் பெண்கள் குறித்தும் தன்னுடைய அனுபவங்களை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தில், கங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஹரிஷ்பூர் பாலிகா வித்யாலயா பள்ளியில் பல குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

கங்கை வெள்ளம்
ஒரு புறம் பள்ளி நடந்துகொண்டிருந்தது. மறுபுறம் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அன்று பள்ளிக்கு பல பெண்கள் வரவில்லை. இதுகுறித்து அங்கிருந்த ஆசிரியர்களுடன் பேசினேன். கங்கையில் ஏற்படும் வெள்ளம் இவர்களது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படும் மக்கள் இதுபோன்ற பள்ளிகளில் தஞ்சமடைகிறார்கள்.

காணாமல் போகும் குழந்தைகள்
கங்கையில் ஏற்படும் வெள்ளம், வங்காளத்தில் வண்டல்மண் பகுதிகளை வாரி சுருட்டிச் செல்கிறது. இதில் பலர் காணாமல் போகிறார்கள். வெள்ளத்தில் பெரும்பாலும் குழந்தைகளை காணாமல் போவது தொடர்ந்து நடக்கிறது. ''போனவாரம் வந்திருந்தா இன்னும் சிலர பாத்திருக்கலாம்'' என பள்ளி நிர்வாகி சொல்ல எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ஆசிரியர் பரிமளா.
வெள்ளம், கடத்தல், வறுமையால் சொந்த ஊரைவிட்டு வெளியேறுதல் என மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் நான்காயிரம் பேர் காணாமல் போவதாக தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications