For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டேலாவின் மரணம் இந்தியாவுக்கு இழப்பு.. மன்மோகன் சிங் இரங்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: நெல்சலன் மண்டேலா உண்மையான காந்தியவாதி. அவரது மரணம், தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இழப்புதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

95 வயது மண்டேலா ஜோஹன்னஸ்பர்க்கில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Manmohan singh and Nelson Mandela

பாரத ரத்னா விருது பெற்றவர் மண்டேலா. இந்த விருதைப் பெற்ற 2வது இந்தியர் அல்லாத தலைவர் மண்டேலாதான். மண்டேலாவின் மறைவுக்கு இந்தியாவும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாபெரும் தலைவர் மறைந்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவைப் போலவே இந்தியாவுக்கும் இது இழப்புதான். மண்டேலா ஒரு உண்மையான காந்தியவாதி என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர்.

English summary
Nelson Mandela, South Africa's anti-apartheid hero, died on Thursday at his Johannesburg home at 95. "A giant among men has passed away. This is as much India's loss as South Africa's. He was a true Gandhian," said Prime Minister Manmohan Singh. Mr Mandela was only the second non-Indian to be given the Bharat Ratna or "jewel of India", the country's highest civilian award. His connection with India was deep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X