நேபாளத்தில் கையை மீறி செல்லும் போராட்டம்.. சிறைகளை சூறையாடிய இளைஞர்கள்.. கைதிகள் விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து அங்கே உள்ள சிறைச்சாலையை இளைஞர்கள் உடைத்து கைதிகளை விடுவித்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் துணைப் பிரதமர் ரபி லாமிச்சானே நக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Nepal

'ஜென் Z' போராட்டம் என்ற பெயரில் இந்த புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. காத்மாண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் 'ஜென் Z' இளைஞர்கள் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமூக ஊடகத் தடையை ஓலி ரத்து செய்த ஒரு நாள் கழித்து, இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன. 'ஜெனரல் இசட்' போராட்டக்காரர்கள் அந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டங்களின் விளைவாக, ராஷ்டிரிய சுவதந்திர கட்சி (RSP) தலைவரான லாமிச்சானே நக்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கையை மீறி செல்லும் போராட்டம்

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் நேற்று வெடித்த போராட்டம் இன்று தீவிரம் அடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய போதிலும் போராட்டமானது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ளனர். எனினும், போராட்டம் தணிந்தபாடில்லை. போராட்டக்கார்கள் நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவி தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவசரமாக விடுதலை

லாமிச்சானேவின் விடுதலை, அங்கு நிலவிய கலவரங்களுக்கு மத்தியில் மற்ற கைதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊழல் வழக்கின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாமிச்சானே, விடுதலையானதும் மக்களிடையே உரையாற்றினார். நேபாளத்தில் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து அங்கே உள்ள சிறைச்சாலையை இளைஞர்கள் உடைத்து கைதிகளை விடுவித்து உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

லாமிச்சானே விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களில், நக்கு சிறையில் இன்னொரு பகுதியில் இருந்த மற்ற 1,500 க்கும் மேற்பட்ட கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது போலீசார் தங்கள் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், கைதிகள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் முடிவுரை

முன்னதாக, லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நடவடிக்கை, நேபாளத்தின் ஏற்கனவே பலவீனமான அரசியல் நிலைமையை மேலும் கேள்விக்குறியாக்கியது. பாராளுமன்றத்தைக் கலைத்து, அரசியல் அமைப்பை மறுசீரமைக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நேபாளத்தின் பாரம்பரிய அரசியல் தலைவர்களுக்கு அரசியல் முடிவுரையாகப் பார்க்கப்படுகிறது.

லாமிச்சானே, நேபாளத்தின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியின் முகமாக உருவெடுத்துள்ளார். ஊழல் மிகுந்த, வயதான பாரம்பரிய அரசியல் தலைவர்களுக்கு மாற்றாக அவர் கருதப்படுகிறார். அவரது செல்வாக்கு, சமூக ஊடகங்கள் முதல் போராட்டக் களங்கள் வரை பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற தொழில் வல்லுநர்கள் தலைமையிலான போராட்டங்கள், நாட்டின் விரக்தி மற்றும் அமைதியற்ற மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+