ராஜபக்சேவை ஆதரித்து ட்வீட்... வட இந்திய பாஜகவிடம் வறுபடும் சு.சுவாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டுமென்ற சு.சாமியை வறுக்கும் நெட்டிசன்- வீடியோ

  டெல்லி: இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே மீண்டும் வர வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

  சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தில் ராஜபக்சேவை ஆதரிப்பதைக் கண்டித்து வட இந்திய பாஜகவினர் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த அதிபர் தேர்தலில் மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'தானே ராஜபக்சேவை தோற்கடித்தது; அவரை நாம் ஏன் நம்ப வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்,

  சீனா ஆதரவாளர் ராஜபக்சே

  மேலும் பலர், ராஜபக்சே சீனாவின் நண்பர் அவர் மீண்டும் அதிபராகக் கூடாது என கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை ஆதரிக்கும் நீங்கள் தமிழரா? இலங்கைக்காரரா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

  உங்களுக்குத்தான் நல்லது

  அதில் சிலர், ராஜபக்சே அதிபராவது உங்களுக்குத்தான் நல்லது; இந்தியாவுக்கு அல்ல எனவும் பதிவிட்டுள்ளனர். அதேபோல் மகிந்த ராஜபக்சேவை ஒருபோதும் ஆதரிக்கவே கூடாது என சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.

  தமிழர்கள் பதிலடி

  வழக்கமாக தமிழர்களை எள்ளி நகையாடுவார் சுப்பிரமணியன் சுவாமி. அதற்கு தமிழ்நாட்டு நெட்டிசன்கள் பதிலடி கொடுப்பார்கள்.

  பாஜகவிடம் சிக்கிய சு.சுவாமி

  பாஜகவிடம் சிக்கிய சு.சுவாமி

  இம்முறை ராஜபக்சேவை ஆதரித்து ட்வீட் போட்டதால் வட இந்திய பாஜகவினரே சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி தந்து வருகின்றனர். சுப்பிரமணியன் சுவாமியும் ஒரு சிலருக்கு பதில் தந்து கொண்டிருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens slammed that the BJP Rajya Sabha MP Subramanian Swamy for his Mahinda Rajapaksa Supporting tweet.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற