For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமராவதற்கு தாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை - பிரணாப் முகர்ஜி

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் பதவிக்கு தாம் ஒருபோதும் முயற்சித்தது இல்லை என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நடந்த விழாவில் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, பிரணாப் முகர்ஜி பிரதமராக முயற்சித்தார் எனக் கூறப்பட்டது.

Never aspired for Prime Minister says Pranab Mukherjee

இந்நிலையில் `கொந்தளிப்பான ஆண்டுகள்: 1986-96' (The Turbulent Years: 1980-96) என்ற தலைப்பில் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தககத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் பல பழைய நினைவுகளை எழுதியுள்ளார் பிரணாப் முகர்ஜி

குறிப்பாக பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி .பிரதமராக முயற்சித்தார் எனக் கூறப்பட்டது. இதை இந்தப் புத்தகத்தில் மறுத்துள்ள முகர்ஜி, ஒரு போதும் பிரதமாரகுவதற்கு முயற்சி செய்யவில்லை என்றார்.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலத்தின் அருகே ராஜீவ் காந்தியும், சோனியாவும் நின்று கொண்டிருந்தனர். நான் மெதுவாக சென்று ராஜீவின் தோளைத் தொட்டு, ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என உணர்த்தினேன். அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காகவே நான் அவரை தொந்தரவு செய்வேன் என உணர்ந்த ராஜீவ் காந்தி என்னை அருகிலிருந்த குளியலறைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என விரும்புவது குறித்தும் பேசினேன்.ராஜீவ் காந்தியிடம் பேசினேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் பின்னர் ராஜீவ் காந்தியின் முடிவு குறித்து கட்சியினருக்கு தெரிவித்தேன் என புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.

English summary
President Pranab Mukherjee has said i never aspired for Prime Minister after Indira Gandhi's assassination
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X