ஜனாதிபதி தேர்தல்.. 20 முதல்வர்கள் புடை சூழ.. பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், 20 மாநில முதல்வர்களின் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. அதே போன்று போன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் இன்று தனது வேட்புமனுவை பிரதமர் மோடியின் முன்னிலையில் ராம் நாத் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

20 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

20 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

ராம்நாத் கோவிந்தை முன்மொழியும், வழிமொழியும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள், ஆதரவு கொடுக்கும் மாநிலங்களின் முதல்வர்கள் என 20 மாநில முதல்வர்கள் இடம் பெற்றனர். அவர்கள் அனைவரும் இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வருடன்..

தமிழக முதல்வருடன்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், காஷ்மீர் முதல்வர் மெகபூபா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 20 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து

ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து

பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்தை முன் மொழிந்து தமிழக முதல்வர் பழனிச்சாமி கையெழுத்திட்டார். அதே போன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் ராம் நாத்தை முன்மொழித்து கையெழுத்திட்டார்.

பங்கேற்காத முதல்வர்கள்

பாஜக வேட்பாளர் ராம்நாத்தை ஆதரித்த பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதே போன்று ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP’s presidential candidate Ram Nath Kovind files nomination in presence of Mod and 20 State CM including Palanisamy today
Please Wait while comments are loading...