ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்.. ஒருமித்த கருத்தை எட்ட தவறிவிட்டது பாஜக.. குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்த எட்ட பாஜக தவறிவிட்டது என்று குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது.

குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் பாஜக ஒருமித்த கருத்தை எட்டவதில் இருந்து தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பாஜகவினர் சந்தித்த போது கூட யார் வேட்பாளர் என்பதை தெரிவிக்காமல்தான் பேசிவிட்டுச் சென்றனர் என்பதையும் குலாம் நபி ஆசாத் சுட்டிக் காட்டியுள்ளார்.

மம்தா எதிர்ப்பு

மம்தா எதிர்ப்பு

இதே போன்று பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இடதுசாரி கட்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும்.

கட்சிகள் முடிவு

கட்சிகள் முடிவு

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் வரும் 22ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, திருணாமுல் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்து கொண்டு தங்களது முடிவுகளை அறிவிக்கும்.

வேட்பாளர் யார்?

வேட்பாளர் யார்?

பாஜக 23ம் தேதி ஜனாதிபதி வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்தக் கூட்டத்தில்தான் அனைவரும் ஏற்கும் ஒரே வேட்பாளரா அல்லது போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பது தெரியவரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress leader Ghulam Nabi Azad opposed BJP’s Presidential candidate today.
Please Wait while comments are loading...