”ரூ.1,000 கோடி தருவதாக சொன்ன நிதின் கட்கரி.. எடை குறைப்பு முயற்சியில் பாஜக எம்பி -நகைச்சுவை காரணம்?

Subscribe to Oneindia Tamil

போபால்: ஒரு கிலோ எடையை குறைத்தால் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சி நிதியாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரில் அளித்த வாக்குறுதியை நம்பி மத்திய பிரதேச பாஜக எம்.பி தினசரி உடற்பயிற்சி செய்து எடை குறைப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய பிரதேச மாநிலம் மால்வா சென்றிருந்தார்.

அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

 நிதின் கட்கரியின் வாக்குறுதி

நிதின் கட்கரியின் வாக்குறுதி

அப்போது அங்கிருந்த மத்திய பிரதேசத்தின் உஜ்ஜய்னி மக்களவைத் தொகுதி பாஜக எம்பி அனில் பிரோஜியா உடல் தடிமனாக இருந்ததை கண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நீங்கள் உங்கள் உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.1000 கோடியை தொகுதி வளர்ச்சி நிதியாக நான் பெற்றுத் தருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

ஒரு கிலோ குறைத்தால் ரூ.1,000 கோடி

ஒரு கிலோ குறைத்தால் ரூ.1,000 கோடி

இதுகுறித்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "மக்களவை உறுப்பினர் அனில் பிரோஜியா தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்காக அதிகளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து என்னிடம் கோரிக்கை விடுத்து வந்தார். அவரிடம் நான் 135 கிலோ எடையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை காட்டினேன். எனது எடையை தற்போது 93 கிலோவாக குறைந்ததை போல் நீங்களும் குறைத்தால் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ரூ.1,000 நிதி ஒதுக்கப்படும்." என்று கூறினேன்.

சீரியசாக உடற்பயிற்சி செய்யும் பாஜக எம்பி

சீரியசாக உடற்பயிற்சி செய்யும் பாஜக எம்பி

இதனை அப்படியே ஏற்றுக்கொண்ட பாஜக எம்பி அனில் பிரோஜியா, தீவிர எடைக்குறைப்பு முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதற்காக தினமும் உடற்பயிற்சி செய்து வரும் அவர், யோகாசன, சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவற்றையும் செய்து வருகிறார். தினசரி இதற்கென்றே 2 மணி நேரத்தை செலவிட்டு வரும் அவர் உணவு கட்டுப்பாட்டையையும் கையில் எடுத்து உள்ளார்.

நிதியை கேட்கப்போகிறாராம்

நிதியை கேட்கப்போகிறாராம்

125 கிலோ எடையோடு இருக்கும் அனில் பிரோஜியா விரைவில் தனது எடையை குறைத்துவிடுவேன் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார். "மத்திய அமைச்சரி நிதின் கட்கரியின் அறிவுரையின் அடிப்படையிலேயே எடை குறைப்பில் ஈடுபட்டு இருக்கிறேன். மொத்தம் ரூ.6,000 கோடியை நிதியாக பெற்று உள்ளேன். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமயத்தில் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற சொல்வேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+