For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்கு இனிமே சிக்கன் கிடையாது.. "ஆடி"ப் போன சசிகலா!

விஐபி அந்தஸ்தை பறித்த சிறை நிர்வாகம் சிக்கன் சாப்பாடுக்கு நோ சொல்லி விட்டதால் சசிகலா விரக்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: சிக்கன் உள்ளிட்ட சிறப்பு உணவுகளுக்கு நோ சொன்னதோடு விஐபி அந்தஸ்தையும் சிறை நிர்வாகம் பறித்து விட்டதால், பெங்களூரு சிறை அறைக்குள் சசிகலா முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை பெற்று பெங்களூரு ஜெயிலில் அடைபட்டுள்ள சசிகலாவிற்கு சிறைத்துறை அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கி கொடுத்திருந்ததும் வெளிச்சத்துக்கு

நவீன வசதிகள் கொண்ட சமையல் அறை அமைக்கப்பட்டிருந்ததும் ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகின. அதில் தனக்கு விருப்பமான சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆள் வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளார் சசிகலா.

5 அறைகள்

5 அறைகள்

சிறைச்சாலை பெண்கள் பிரிவின் முதல் மாடியில் அவருக்கு சமையல் அறை, படுக்கை அறை, பார்வையாளர் சந்திப்பு அறை, உடமைகள் வைக்கும் அறை, யோகா செய்ய ஒரு அறை என மொத்தம் 5 அறைகள் கொடுக்கப்பட்டிருந்தது.

சலுகைகள் ரத்து

சலுகைகள் ரத்து

சிறையில் வழங்கப்படும் மெனுப்படி அவர் இதுவரை சாப்பிடவில்லை. ஸ்பெஷலாக சமைத்து சாப்பிட்டு வந்தார். காலை நேரத்தில் இட்லி, தோசைகளை ஸ்பெஷலாக சாப்பிட்டு வந்தார். மதியம் தினசரி அசைவம் சாப்பாடுதான் சாப்பிட்டு வந்தார் சசிகலா.

ராகியும் தயிர் சாப்பாடும்

ராகியும் தயிர் சாப்பாடும்

சிறப்பு சமையல்காரர் மூலம் அது தயாரிக்கப்பட்டுவந்துள்ளது. ஊடகங்களில் படம் வெளியானது முதல் சசிகலாவின் விஐபி சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிற கைதிகளுக்கு போல ராகி ரொட்டியும், தயிர் சாதமும் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை சசிகலா சாப்பிடவில்லையாம்.

விரக்தியில் சசிகலா

விரக்தியில் சசிகலா

சிறப்பு உணவு இல்லை, சிறப்பு வசதிகள் இல்லை என்பதால் சசிகலா சிறைக்குள் விரக்தி அடைந்திருப்பதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வேறு சிறைக்கு மாற்றம்

வேறு சிறைக்கு மாற்றம்

பெங்களூருவில் இருந்து தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் சசிகலாவிடம் குமுறலை ஏற்படுத்தி இருக்கிறது. பணத்தை வாரி இறைத்து சலுகைகளை பெற்றது குறித்து சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Usually, Sasikala would have non-vegetarian lunch in jail but yesterday she had ragi rotti and curd rice for lunch,sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X