For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதாகரனின் "பப்பு" கொஞ்சம் கூட வேகலையாம்.. பரப்பன அக்ரஹாரா சிறையில்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றவாளி சுதாகரன், அங்கு வந்தது முதல் என்னென்னவோ ஸ்டண்ட் எல்லாம் அடித்துப் பார்த்தாராம். ஆனால் எதுவும் சிறை அதிகாரிகளிடம் போணியாகவில்லையாம்.

சிறைக்கு வருவது சுதாகரனுக்கு புதிதில்லை. அவர் சிறைப் பறவையாகி ரொம்ப காலமாகி விட்டது. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசியுடன் சேர்த்து பிப்ரவரி மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கு வந்த புதிதில் அது சரியில்லை, இது சரியில்லை, சாப்பாடு பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தாராம். என்னென்னவோ ஸ்டண்ட் எல்லாம் அடித்துப் பார்த்தாராம். ஆனால் எந்த பப்பும் வேகவில்லையாம்.

சாப்பாடு பிடிக்கலை

சாப்பாடு பிடிக்கலை

சிறை சாப்பாடு சுத்தமாக பிடிக்கவில்லையாம் சுதாகரனுக்கு. இதனால் சிறை சாப்பாட்டைத் தவிர்க்க என்னென்னவோ செய்து பார்த்தாராம். ஆனால் நடக்கவில்லையாம். முதலில் அவரை சமாளிப்பது சிறை அதிகாரிகளுக்கு சிரமமாக இருந்ததாம்.

வீட்டுச் சாப்பாடு கேட்டு அடம்

வீட்டுச் சாப்பாடு கேட்டு அடம்

ஆரம்பத்தில் வீட்டுச் சாப்பாடு கேட்டு அடம் பிடித்தாராம். ஆனால் அதை அதிகாரிகள் முழுமையாக நிராகரித்து விட்டனராம். இதுதொடர்பாக அவர் எப்படியெல்லாமோ கோரிப் பார்த்தும் முடியவே முடியாது என்று கூறி விட்டனராம்.

உறவினர்களை சந்திக்க கோரிக்கை

உறவினர்களை சந்திக்க கோரிக்கை


அதேபோல தான் நினைத்தபோதெல்லாம் உறவினர்களையும் தனது குடும்பத்தினரையும் சந்திக்க அனுமதி கேட்டாராம். ஆனால் விதிப்படி வாரம் 2 முறை மட்டுமே அதற்கு அனுமதி தரப்படும் என்று சிறை அதிகாரிகள் கூறி விட்டனராம்.

சிறப்பு சலுகை எதுவும் இல்லை

சிறப்பு சலுகை எதுவும் இல்லை

சுதாகரனுக்கு சிறப்புச் சலுகை எதுவும் தரப்படவில்லையாம். இவருடன் இன்னொரு கைதியும் அந்த அறையில் தங்கியுள்ளாராம். அந்தக் கைதியுடன் பேசியபடியே பொழுதைக் கழிக்கிறாராம் சுதாகரன். மற்ற கைதிகளுடனும் இயல்பாக பேசுகிறாராம்.

ஒரு வேலையும் செய்யவில்லை

ஒரு வேலையும் செய்யவில்லை

சிறையில் எந்த வேலையும் செய்யவில்லையாம் சுதாகரன். சும்மாதான் இருக்கிறாராம். இவருக்கு சாதாரண சிறை தண்டனைதான் என்பதால் இவர் கட்டாயம் வேலை பார்க்க வேண்டியதில்லையாம். கடுங்காவல் தண்டனைக் கைதிகளுக்குத்தான் வேலை கட்டாயமாம்.

அடங்கிட்டாரு

அடங்கிட்டாரு

ஆரம்பத்தில் கத்தியெல்லாம் சவுண்டு விட்டாராம். ஆனால் அதிகாரிகள் எச்சரித்த பின்னர் இப்போது அமைதியாகி விட்டாராம். இப்போதெல்லாம் பிடிவாதம் பிடிப்பதில்லையாம். தினசரி செய்தித்தாள் படிப்பது, டிவி பார்ப்பது என பொழுதைக் கழித்து வருகிறாராம். சக கைதிகளுடன் நிறையப் பேசிக் கொண்டே இருக்கிறாராம்.

அடங்கித்தானே ஆகனும்!

English summary
For Sudhakaran the jail stint is not a first. After being convicted along with Sasikala Natarajan and Ilavarasi in the disproportionate assets case, he surrendered before a special court in Bengaluru following which he has been lodged in jail. Sudhakaran upon his entry into jail in February had thrown tantrums with the jail authorities as he was unhappy with the food. He was a difficult person to handle for the jail staff in the initial days. He had even shouted at the jail staff, but was warned. He behaviour is now normal, officials say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X