For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்பாடா.. கேரளாவில் குறைந்தது மழை.. ரெட் அலர்ட் இல்லை.. மக்களுக்கு சின்ன நிம்மதி!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளத்தில் மழை குறைந்ததால் ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. இது மக்களுக்கு சின்ன நிம்மதியை அளித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழை பெய்தது. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். மேலும் மாநிலத்தில் 19,512 கோடி சேதம் அடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

மழைால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அப்போது முதல் கட்டமாக மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்குவதாக மோடி அறிவித்தார். எனினும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேட்டதோ ரூ. 2000 கோடி ஆகும்.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

58 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்பு பணிகளையும் அவசர மருத்துவ உதவி அளிக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

மேலும் மழை கொட்டி தீர்க்கும் என்ற வதந்தியால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து நேற்று சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுக் கொண்டது.

மஞ்சள் அலர்ட்

மஞ்சள் அலர்ட்

எனினும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. எனினும் பத்தினம்திட்டா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வரும் 20-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

English summary
The weather department has withdrawn red alert for all districts for today and orange alert has been issued for 10 districts and yellow alert for two.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X