பெங்களூர் சிறையில் ஏடிஜிபி திடீர் ஆய்வு.. முறைகேடுகள் பற்றி விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 32 கைதிகள் மாற்றப்பட்டது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ். மெஹரிக் விசாரணை நடத்தினார்.

பெங்களூர் மத்திய சிறையில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக அதிகாரி ரூபா வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மெஹரிக் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

NS Megharikh, Additional Director General of Police,visit Bengaluru jail

ரூபா புகாரைதொடர்ந்து சிறையிலிருந்த 32 கைதிகள் திடீரென வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

ரூபா புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அளித்த புகாரையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நேற்று சிறையில் ரெய்டு நடத்தியிருந்தார். அவர் சிறை கண்காணிப்பாளர் அனிதாவிடமும் விசாரணை நடத்தியிருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NS Megharikh, Additional Director General of Police, Anti-Corruption Bureau, was transferred with immediate effect and posted as Additional DGP, who visit Bengaluru jail.
Please Wait while comments are loading...