மாவோயிஸ்டுகளின் 'சோலி' அடியோடு முடிந்தது.. 6 மாவட்டங்களில்தான் ஆட்டம்- அமித்ஷா நம்பிக்கை
டெல்லி: நாட்டில் மாவோயிஸ்டுகள் எனப்படும் நக்சலைட்டுகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை வெறும் 6 ஆக குறைந்துவிட்டது; 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மாவோயிஸ்டுகள் எனப்படும் நக்சலைட்டுகள் (நக்சல்கள்) அடியோடு அழிக்கப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: நக்சல் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நமது நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மோடி அரசு நக்சலிசத்திற்கு இரக்கமற்ற அணுகுமுறை, அனைத்து பரவலான வளர்ச்சிக்கான இடைவிடாத முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலிசத்தை வேரோடு களைய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நாட்டில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. இவற்றில், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6-ஆகவும், கவலைக்குரிய மாவட்டங்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 6-ஆகவும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களின் எண்ணிக்கையும் 17-லிருந்து 6-ஆகவும் குறைந்துள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து 4 மாவட்டங்கள் (பிஜாப்பூர், கான்கெர், நாராயண்பூர் மற்றும் சுக்மா), ஜார்க்கண்டிலிருந்து 1 (மேற்கு சிங்பும்), மகாராஷ்டிராவிலிருந்து 1 (கட்சிரோலி) ஆகியவை இதில் அடங்கும்.
நக்சலிசத்திற்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களின் எண்ணிக்கையும் 17-லிருந்து 6-ஆகக் குறைந்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பொது உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்காக சிறப்பு மத்திய நிதியுதவி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் முறையே ரூ.30 கோடி மற்றும் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, தேவைக்கேற்ப இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
Taking a giant stride towards building a Naxal-free Bharat, today our nation achieved a new milestone by significantly reducing the number of districts most affected by left-wing extremism to just 6 from 12. The Modi government is building a Sashakt, Surakshit and Samriddh Bharat…
— Amit Shah (@AmitShah) April 1, 2025
கடந்த ஓராண்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதும், சாலை விரிவாக்கம், போக்குவரத்து வசதிகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் அரசின் பிற நலத்திட்டங்கள் கிராம மக்களை சென்றடைந்ததும் இடதுசாரி தீவிரவாத சூழ்நிலையில் ஏற்பட்ட துரித முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த 50 மாவோயிஸ்டுகள்
முன்னதாக கடந்த சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூரில் 50 நக்சலைட்டுகள் சரணடைந்தது குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவர்களை பொது பிரிவில் இணைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை, ஆயுதத்தைத் துறப்பவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்கிறது என்பதைக் குறிப்பிட்ட அவர், மற்ற நக்சலைட்டுகள் வன்முறையைக் கைவிட்டு சமூகத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். நக்சலிசத்தை ஒழிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அமித்ஷா ஷா, 2026 மார்ச் 31 க்குப் பிறகு, இது நாட்டில் வரலாறாக மாறும் என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிஜாப்பூரில் (சத்தீஸ்கர்) 50 நக்சலைட்டுகள் வன்முறை பாதையை கைவிட்டு சரணடைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வன்முறை மற்றும் ஆயுதங்களை விட்டுவிட்டு வளர்ச்சியின் பிரதான பிரிவில் இணைபவர்களை நான் வரவேற்கிறேன். ஆயுதங்களை விட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நக்சலைட்டும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு பிரதான பிரிவுடன் இணைக்கப்படுவார்கள் என்ற மோடியின் கொள்கை தெளிவாக உள்ளது. மீதமுள்ள மக்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பொது பிரிவில் இணைய வேண்டும் என்று நான் மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கிறேன். மார்ச் 31, 2026 க்குப் பிறகு, நக்சலிசம் நாட்டில் வரலாறாக மாறும், இது எங்கள் தீர்மானம் என கூறியிருந்தார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications