Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- வரிந்து கட்டி எதிர்க்கும் இந்தியா கூட்டணி கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தது. இதனால் நாடாளுமன்றம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முழுமையாகவும் கடுமையாகவும் எதிர்ப்போம் என்று திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்துள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான கட்சித் தலைவர்களின் கருத்துகள்:

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்: இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான 'ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்!அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும்.

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தால்… நமது அரசியலமைப்பை வடித்துத் தந்தோர் நம் நாடு அராஜகத்துக்குள்ளும் முற்றதிகாரத்துக்குள்ளும் நழுவி வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்களை நடத்தப்படுவதன் மூலமாக சட்டரீதியாக அமைத்த அரண்கள் நீக்கப்படும்.

மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். மாநில உணர்வுகளும் பன்முகத்தன்மையும் அழிக்கப்படும். இந்திய அரசியலை என்றென்றைக்குமாக மாற்றியமைத்துவிடக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை.

ஆனாலும், பழிவாங்கும் எண்ணத்துடனும், நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பா.ஜ.க. அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் இத்தகைய அடாவடி முயற்சியை மேற்கொள்கிறது. தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த அருவருப்பான நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்ப்பதில் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! இந்தியாவை, அதன் பன்முகத்தன்மையை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்.

காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ்: இந்த மசோதவை முழுமையாக, உறுதியாக எதிர்க்கிறோம். பாஜகவின் முதன்மை நோக்கமே புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடியது.

உத்தவ் தாக்கரே சிவசேனா பிரியங்கா சதுர்வேதி: அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா. இது அரசியல் சாசனத்தின் மீதான பெரும் தாக்குதல். நாட்டின் தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கக் கூடியது. அனைத்து அதிகாரத்தையும் தன்வசமாக்கிக் கொள்ளும் பாஜகவின் முயற்சிதான் இது. இதற்கு எத்தகைய விலையை நாம் கொடுக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. இதனை கடுமையாக எதிர்ப்போம்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்: அரசியல் சாசனத்தை நிர்மூலமாக்கக் கூடிய நடவடிக்கைதான் ஒரே நாடு ஒரே தேர்தல். இந்த மசோதாவை சமாஜ்வாதி கட்சி கடுமையாக எதிர்க்கும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி: ஒரே நாடு ஒரே மசோதாவின் அனைத்து அம்சங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் முழு வீச்சில் எதிர்க்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடியது இந்த மசோதா.

ஜெகன் கட்சி ஆதரவு: ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் இடம் பெறாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஒரே நாடு ஒரே மசோதாவை ஆதரிக்கிறது. அக்கட்சியின் எம்பி மிதுன் ரெட்டி கூறுகையில், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எங்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை; ஒரே நாடு ஒரே மசோதாவை நாங்கள் ஆதரிப்போம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+