இன்றே கடைசி.. மினி லாரியில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை தாக்கல் செய்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர்!

தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் மினி லாரியில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை தாக்கல் செய்துள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சின்னம் மற்றும் கட்சித் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் மினி லாரியில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் மற்றும் தீபா ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, வரும் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு டெல்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில் கூடுதல் விசாரணை நடக்கவுள்ளது. இதற்காக தேவைப்படும் ஆவணங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மினி லாரியில் பெட்டி பெட்டியாக

ஆவணங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசிநாள் என்பதால் தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆவணங்களை இரு அணியினரும் ஆவணங்களை மினி லாரியில் பெட்டி பெட்டியாக கொண்டு சென்று தாக்கல் செய்துள்ளனர்.. அதில் சின்னத்தை மீட்பதற்கான ஆவணங்கள், எழுத்துப்பூர்வமான கூடுதல் ஆவணங்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இணைந்துவிட்டதாக

இணைந்துவிட்டதாக

ஏற்கனவே ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்து விட்டதாக இரு தரப்பினரும் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதன் நீட்சியாக இன்று கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் தாக்கல்

அமைச்சர்கள் தாக்கல்

அமைச்சர்கள் ஆர்பி உதயக்குமார், சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.ஏற்கனவே டிடிவி தினகரன் தரப்பு லாரிகளில் ஆவணங்களை தாக்கல் செய்தது.

தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

இந்நிலையில் ஆவணங்களை தாக்கல் செய்ய தினகரன் தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று மறுப்பு தெரிவித்தது நினைவுக்கூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+