உஸ்மானியா பல்கலை.யில் மாட்டிறைச்சி திருவிழா சர்ச்சை....16 மாணவர்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!
ஹைதராபாத்: ஹைதரபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாட்டிறைச்சி திருவிழாவை நடத்த முயற்சித்ததாக 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாட்டிறைச்சி திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 10-ந் தேதி உலக மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்த ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மாட்டிறைச்சியை வீட்டில் சமைத்து சாப்பிட்டார் என்பதற்காக உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் இக்லால் என்ற முஸ்லிம் பெரியவர் அடித்தே கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து உண்ணும் உணவு ஒருவரது அடிப்படை உரிமை; அதில் யாரும் தலையிடக் கூடாது என்பதை வலியுறுத்தி பல இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாகவே உஸ்மானியா பல்கலைக் கழகத்திலும் இந்த மாட்டிறைச்சி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பன்றி இறைச்சி திருவிழாவை நடத்துவோம் என ஒருதரப்பு அறிவித்தது.
Police detains 16 students from Ambedkar hostel of Osmania University who had planned to organise beef festival in the university today.
— ANI (@ANI_news) December 10, 2015 இதனைத் தொடர்ந்து மாட்டிறைச்சி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த 16 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மாட்டிறைச்சி சாப்பிடும் நிகழ்வுக்கு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜாசிங்கையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
இதனால் உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications