ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி.. குஜராத் சென்ற நிலையில் திடீர் உடல் நலக்குறைவு
அகமதாபாத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ப சிதம்பரத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றிருந்தார். அகமதாபாத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நிலையில், அவர் அங்கு சோர்வாகவே காணப்பட்டார்.

ப சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென சோர்வாக இருந்ததையடுத்து அவரை தொண்டர்கள் தூக்கிச்சென்று ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளி வரவில்லை. ஆனால் வெயிலின் தாக்கத்தால் தான் மயங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தந்தை நலமுடன் இருப்பதாக மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நலம் விசாரித்த ஸ்டாலின்
எனது தந்தை வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார் என்றும், இதனாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ப. சிதம்பரத்தின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ப. சிதம்பரம் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி அறிந்து, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கார்த்திக் சிதம்பரத்தை தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், ப சிதம்பரம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications