போர்க்களமாகும் நாடாளுமன்றம்- வக்ஃபு மசோதா நாளை தாக்கல்- வரிந்து கட்டி தயாராகும் எதிர்க்கட்சிகள்!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் சர்ச்சைக்குரிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. மத்திய அரசின் இந்த மசோதாவை முழுவீச்சில் எதிர்க்க இருப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் நாளைய நாடாளுமன்ற கூட்டம் பெரும் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.
இஸ்லாமியர்கள், இறைவனின் பெயரில் வழங்கும் சொத்துகளை நிர்வகிக்கக் கூடியது வக்ஃபு வாரியம். வக்ஃபு வாரிய சொத்துகள் தொடர்பாக ஏற்கனவே சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா என புதியதாக ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் வக்ஃபு சொத்துகளை நிர்வகிக்கும் கவுன்சிலில் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தவரும் உறுப்பினராக்கப்படுவர்; வக்ஃபு சொத்துகளின் மீதான பிரச்சனையில் மாவட்ட ஆட்சியரே இறுதி முடிவு எடுப்பார் என்பது உள்ளிட்ட சரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இது வக்ஃபு வாரிய சொத்துகளை அரசே அபகரிக்கும் நடவடிக்கை என்கின்றன எதிர்க்கட்சிகள். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சிகளின் அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டன. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பரிந்துரைகள் மட்டும் ஏற்கப்பட்டன. இதனால் எதிர்க்கட்சிகள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நாளை சர்ச்சைக்குரிய இந்த வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுமையாக ஆதரிக்கும் இந்த மசோதாவை, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கடுமையாக எதிர்க்கின்றன.
வக்ஃபு வாரிய மசோதா தொடர்பான எம்பிக்களின் கருத்துகள்
பாஜக எம்பி தினேஷ் சர்மா: ஏழை முஸ்லிம்களின் கனவு நிறைவேற இருக்கிறது. இந்த மசோதா மூலம் வக்ஃபு வாரிய நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட அரசாங்கமோ தனிநபரோ ஆக்கிரமித்துவிட முடியாது. வக்ஃபு மசோதாவை எதிர்ப்பவர்கள் அரசியல் சாசனத்துக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் எதிரானவர்கள்.
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்: 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு ஒன்றில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், வக்ஃபு வாரியத்தின் சொத்துகளில் 90% ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக சொல்கிறது மத்திய அரசு. அப்படியானால் தற்போதைய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் தேவைதான் என்ன?
காங்கிரஸ் எம்பி ஜெபி மாதெர்: மத்திய அரசானது மக்களை பிளவுபடுத்துவதாக உள்ளது. வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவில் என்ன மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுப்போம். கேரளா கத்தோலிக் பிஷப் கவுன்சில், வக்ஃபு மசோதாவை ஆதரிக்கிறது; அந்த கவுன்சில் மீது மரியாதை வைத்துள்ளோம். பிஷப் கவுன்சிலின் கவலைகள் என்ன என்பதை உள்வாங்குவோம். சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படடவேண்டும்.
ஜேடியூ எம்பி சஞ்சய் ஜா: பீகார் மக்களுக்காக 19 ஆண்டுகளாக நிதிஷ்குமார் பாடுபட்டு வருகிறார். இந்த முறை முஸ்லிம் மக்களுக்காக பாடுபட்டு வருகிறார் நிதிஷ்குமார். வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா, முதல் முறையாக கொண்டுவரப்படவும் இல்லை. 2013-ம் ஆண்டும் கூட இதேபோல வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு பல்வேறு யோசனைகளை பரிசீலனை செய்திருக்கும் என நம்புகிறோம். நிதிஷ்குமார் அரசியலில் இருக்கும் வரை சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா: இந்த நாட்டின் சொத்துகள் 5% மக்களுக்காக கொடுக்கப்படுகின்றன. அரசியல் சாசனத்தின் பிரிவுகள் இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிறது.. ஆனால் நீங்களோ வக்பு வாரிய மசோதாவை கொண்டு வருகிறீர்களே ஏன்?
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எம்பி: பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் வாக்குக:ளை குறிவைத்துதான் இருக்கின்றன. வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை சமாஜ்வாதி கட்சி முழுமையாகவே எதிர்க்கிறது. வக்ஃபு வாரிய சொத்துகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது பாஜக. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு என எந்த ஒரு நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டாலும் மக்களிடம் இருந்து பறிக்கத்தான் பார்க்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைப் பார்த்து, அரசியலுக்காக செய்வதாக குற்றம்சாட்டுகிறது பாஜக. இந்துக்களை மட்டுமல்ல இஸ்லாமியர்களையும் பாஜக தவறாக வழிநடத்துகிறது.
சிபிஐ எம்பி சந்தோஷ் குமார்: வக்ஃபு வாரிய மசோதாவின் சில சரத்துகள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை; நாட்டின் மதசார்பின்மைக்கு கேடு விளைவிக்கக் கூடியது. ஆகையால் இந்த மசோதாவை எதிர்க்கிறோம்.
#WATCH | Delhi: On Waqf Amendment Bill, AIMIM chief Asaduddin Owaisi says "This bill is unconstitutional. This bill is a violation of Article 14, Articles 25, 26 and 29. If Chandrababu Naidu, Nitish Kumar, Chirag Paswan and Jayant Chaudhary will praise it then they are doing so… pic.twitter.com/g0RdkEw67r
— ANI (@ANI) April 1, 2025
மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா, அரசியல் சாசனத்துக்கு எதிரானது; அரசியல் சாசனத்தின் 14, 25,26, 29-வது பிரிவுகளுக்கு எதிரானது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, சிராக் பாஸ்வான், ஜெயந்த் சவுத்ரி ஆகிய பாஜக கூட்டணி தலைவர்கள், அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர். ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்? இந்து சமய அறநிலையத்துறை அமைப்புகளில் இந்து அல்லாத ஒருவர் உறுப்பினராகிவிட முடியுமா? அப்படியானால் வக்ஃபு அமைப்புகளில் முஸ்லிம் அல்லாத ஒருவர் எப்படி உறுப்பினராக முடியும்?
திமுக வழக்கு தொடரும்
வக்ஃபு வாரிய மசோதாவை தொடர்ந்து எதிர்க்கும் திமுக, நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் கடுமையாக விமர்சித்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என திமுக மூத்த தலைவர் ஆ.ராசா ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அண்மையில், மத்திய பாஜக அரசின் இந்த வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என உறுதியாக தெரிவித்திருந்தார். வக்ஃபு வாரிய சொத்துகளை அரசே கையகப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டு சிறுபான்மை இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறது பாஜக என்பதும் திமுகவின் நிலைப்பாடும் குற்றச்சாட்டுமாகும்.
நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாளை தாக்கல் செய்ய முயற்சிக்கும் போது அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பி சபை நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கக் கூடும்; இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படலாம். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களின் முழக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய பாஜக அரசு முயற்சிக்கவும் செய்யக் கூடும். மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications