For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ரென ரன்வேயில் சறுக்கி.. சேற்றில் சிக்கிய இண்டிகோ விமானம்.. பதறிய பயணிகள்.. பரபர சம்பவம்

Google Oneindia Tamil News

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்படும்போது அதன் ஓடுபாதையில் விலகி சென்று, சறுக்கிக்கொண்டு சேற்றுக்குள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

மனித கண்டுபிடிப்புகளில் மிக வியக்கத்தக்கதாக காணப்படுவதில் விமான போக்குவரத்தும் ஒன்றாகும். பலருக்கு வானில் பறப்பது என்றாலே அலாதியான ஒரு சுகம்தான்.

பஸ், ரெயில் போக்குவரத்தை காட்டிலும் மிக விரைவாகவும், சவுகரியமாகவும் இந்த பயணம் உள்ளது.

6 ஆண்டுகளில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம் 6 ஆண்டுகளில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

 இண்டிகோ விமானம்

இண்டிகோ விமானம்

அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் பயணிகளும் ஏறிச்சென்று அமர்ந்தனர். மொத்தம் 98 பயணிகள் இந்த விமானத்தில் இருந்தனர். சரியாக நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த அந்த விமானம், டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது ரன்வேயில் இருந்து சறுக்கியது. விமானத்தின் ஒரு பக்க டயர் ரன்வேக்கு வெளியே இருந்த புல்வெளியில் சிக்கிக் கொண்டது.

 உடனடியாக நிறுத்தப்பட்ட நிறுவனம்

உடனடியாக நிறுத்தப்பட்ட நிறுவனம்

விமானத்தின் ஒருபக்க டயர் சேற்றில் சிக்கியாதால் சுதாரித்துக்கொண்ட விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார். இதனால் அந்தவிமானம் பெரிய விபத்துக்குள்ளாவதில் இருந்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகளும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர். இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் விமானம் பாதுகாப்பாக நிறுத்தும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 ட்விட்டரில் வீடியோ

ட்விட்டரில் வீடியோ

இதற்கிடையே விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சேற்றுக்குள் சிக்கும் காட்சியை ஒருவர் வீடியோவாக படம்பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் ஒருவர், விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்தும், கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். இந்த பதிவுகளோடு நெட்டிசன்கள் சிலர் விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்து காரசரமாக விவாதித்ததையும் பார்க்க முடிந்தது.

 பதிலளித்த விமான நிறுவனம்

பதிலளித்த விமான நிறுவனம்


இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமானத்தின் டயர் சேற்றில் சிக்கியிருக்கும் வீடியோ டேக் செய்து அனுப்பியுள்ளார். மேலும் அதில், பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த விமானம் தாமதம் ஆகியிருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், சம்பந்தட்ட டீமிடம் இதை எடுத்துச்செல்கிறோம் என்றும், உங்களின் பி.என்.ஆர் எண்ணை ஷேர் செய்யுங்கள். நீங்கல் சவுகரியமாக கொல்கத்தாவுக்கு சென்று இருப்பீர்கள் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

English summary
An Indigo flight from Assam's Jorkat to Kolkata veered off the runway, skidded and got stuck in mud, creating a stir. Due to this the flight was canceled and the passengers suffered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X