'Nimbuzz' இணையதளம் மூலமாக பாட்னா குண்டுவெடிப்புக்கான "உத்தரவு" வந்தது?
டெல்லி: பாட்னா குண்டுவெடிப்புக்கான உத்தரவு 'Nimbuzz' இணையதளம் மூலமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பாட்னா மற்றும் புத்த கயா குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் நடத்தியுள்ளது என்பதும் விசாரணயில் தெரியவந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனராக கருதப்படும் ரியாஸ் பட்கல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன். இவனும் இணை நிறுவனரான யாசின் பட்கலும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் யாசின் பட்கல் பீகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிக்கினான்.
ஆனால் ரியாஸ் பட்கல் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டான். அவன் அங்கிருந்தபடியே இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறான். அவனுடன் தெஷீன் அக்தர்தான் நேரடி தொடர்பில் இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது 'Nimbuzz' இணையதளம் மூலமாக சந்தேகத்துக்குரிய செல்போன்களுக்கு வரும் மெசேஜ்களை தேசிய புலனாய்வு இடைமறித்துப் பார்த்ததில் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஞ்சியில் ஹைதர் அலி என்ற தீவிரவாதி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான்.
அங்கு கைப்பற்றப்பட்ட குண்டுகள் புத்த கயாவிலும் பாட்னாவில் வெடித்தவை. அதனாலேயே இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் இரு குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் உறுதியுடன் நம்புகின்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் இன்னும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications