அம்மா சார்..மகனுக்காக மொட்டை அடித்து 17 லட்சத்தில் அன்னதானம் செய்த பவன் கல்யான் மனைவி அண்ணா லெஷ்னீவா
அமராவதி: ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் வெளிநாட்டில் தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது இந்தியா திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், தனது மகனின் நலம் விரும்பி அவரது மனைவி அண்ணா லெஷ்னீவா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார். இந்நிலையில்; மகனுக்காக தேவஸ்தானத்துக்கு 17 லட்சம் ரூபாய் செலுத்தி அன்னதானம் போட்டிருக்கிறார். அதுவும் பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஆந்திரா திரையுலகில் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் பவன் கல்யாண். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் ஆக்சன் காட்சிகளுக்காக பெயர் போனவர். தொடர்ந்து சினிமா போலவே அரசியலிலும் அதிரடி காட்டி கட்சி ஆரம்பித்தார்.

முதல் தேர்தலில் மண்ணைக் கவினாலும் அடுத்த தேர்தலில் பாஜக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். தொடர்ந்து துணை முதலமைச்சர் ஆகவும் பதவியேற்றார் பவன். அவரது மனைவி அண்ணா லெஷ்னீவா ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். இந்த தம்பதியினருக்கு மார்க் ஷங்கர் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் சங்கர் சிங்கப்பூரில் படித்து ஒரு நிலையில் சமீபத்தில் அங்கு நடந்த தீ விபத்தில் சிக்கி தீக்காயம் அடைந்தார். இந்த தகவலை கேட்டதும் பவன் கல்யாண் அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக சிங்கப்பூர் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று நலையில் இந்திய அழைத்து வந்து ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனது மகன் உடல்நலம் பெற்று திரும்பினால் முடிக்காணிக்கை செலுத்துவதாக ஏழுமலையான் கோவிலுக்கு வேண்டி இருந்தார் அண்ணா லெஷ்னீவா. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு வந்த அவர் அங்குள்ள உறுதிமொழி பதிவேட்டில் கையெழுத்திட்டார். காரணம் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பது விதி.
Pawan Kalyan’s wife doing Annaprasadam Seva at Tirumala Tirupati following all the rituals
— Sheetal Chopra 🇮🇳 (@SheetalPronamo) April 14, 2025
When Pawan Kalyan garu spoke about Dharma Raksha this is what he meant
Practice your Dharma
To retain it , To Protect it
🔥🔥 pic.twitter.com/FqyVqlY2YL
அந்த வகையில் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்துப் போட்ட அவர் நேரடியாக சென்று தலை முடி காணிக்கை செலுத்தினார். அன்று இரவு திருமலையில் தங்கிய அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்ததோடு ரங்கநாயகி மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தொடர்ந்து திருப்பதி திருமலையில் தனது மகன் உடல் நலம் பெற வேண்டி பக்தர்களுக்கு வழங்கும் இலவச அன்னதானத் திட்டத்திற்கான செலவை ஏற்றுக்கொண்டார். அதற்காக 17 லட்சம் ரூபாய் காசோலையை தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுத்து, தொடர்ந்து தன் கையாலேயே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.

தன்னுடைய மகன் மார்க் சங்கர் ஏழுமலையான் அருளால் தான் தீ விபத்தில் சிக்கினாலும் உயிர் தப்பினார் என்றும், அதற்காக நன்றி தெரிவிப்பதற்காகவும், அவன் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டிக் கொண்டதாக அண்ணா லெஷ்னீவா கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் முடி காணிக்கை செலுத்திய வீடியோக்களும் அன்னதானம் செய்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications