'என்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.. சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தணும்'..மம்தா பானர்ஜி பளீச்!
கொல்கத்தா: தன்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஓட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கோஷர் உள்ளிட்ட பலரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.இந்த பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.மேலும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருசேர கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் தன்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த அவர் கூறியதாவது:-பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் ஆபத்தானது. எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய தலைவர்களுடன் என்னால் போனில் பேச முடியவில்லை.
மக்கள் பணிகளுக்கு பணம் செலவழிப்பதற்கு பதிலாக எதிர்கட்சிகளை உளவு பார்ப்பது போன்ற பணிகளில் அதிக பணத்தை கொட்டி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.ஏன் அமைச்சர்கள், நீதிபதிகள் போன்கள் கூட ஒட்டு கேட்கப்பட்டு உள்ளன. இது லேசான விஷயம் கிடையாது. எனவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்று சேர வேண்டும்.
கடுமையாக போராட வேண்டும். இது தவிர நீதித்துறையால் மட்டுமே நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. எனவே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications