Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றிலும் தண்ணீர் தான்.. ஆனா குடிக்க தண்ணீர் இல்லை! கண்ணீரிலும் தவிக்கும் ஆந்திர மக்கள்!

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 136 கால்நடைகள் இறப்பு, 1,72,542 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் என ஆந்திர அரசு தகவல் தெரிவித்துள்ளது.நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாகவே 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்ததால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது.

andhra flood chandrababu naidu ndrf

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வானத்தில் ஓட்டை விழுந்தது போது மழை பெய்ததால் ஆந்திராவில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர்.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஆறுகள் குளங்கள் ஏரிகள் நிரம்பி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த மழை காரணமாக ஆந்திராவில் மட்டும் 17 பேர் பலியாகி உள்ள நிலையில் தெலுங்கானாவில் 16 பேர் என 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். ஆந்திராவில் மட்டும் 136 கால்நடைகள், 5000க்கும் மேற்பட்ட கோழிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 420 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

இது மட்டுமல்லாமல் சுமார் 62,000 ஏக்கர் கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. கனமழை காரணமாக ஆந்திராவில் என்டிஆர் மாவட்டம், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல விஜயவாடா, மொகல்ராஜபுரம் , சுண்ணாம்பு மலைப்பகுதியில் இடைவிடாமல் மீது மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமானது.

இதற்கிடையே கனமழை காரணமாக ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டதால் 438 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் சாலையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம், தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் வீட்டின் மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்.

வீட்டை சுற்றிலும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் இருந்தாலும் தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை என வேதனையுடன் மக்கள் கூறி வருகின்றனர். இதற்கு இடையே வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றன. மேலும் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு தொடர்ந்து உணவு குடிநீர் உள்ளிட்டை வழங்கப்படுகிறது.

ஆபத்தான சூழலில் சிக்கி இருக்கும் நபர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விஜயவாடாவின் அஜித் சிங் நகரில் தற்போதும் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கிறது. மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர். தான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய பேரிடர் எனக் கூறியுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+