For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாரணை, கஸ்டடி கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம்- சுப்ரீம் கோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

People in police custody or jail can contest elections: Supreme Court
டெல்லி: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் மற்றும் போலீஸ் கஸ்டடியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஜூலை 10ந் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விசாரணைக் கைதிகளாகவும் போலீஸ் கஸ்டடியில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தில் இது தொடர்பாக திருத்தம் கொண்டுவந்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் செக்சன் 8(4) பிரிவின்படி சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறியுள்ளது.

இதேபோல் போலீஸ் கஸ்டடியில் உள்ள விசாரணைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
In a big breather for politicians, the Supreme Court on Tuesday approved an amendment in the Representation of People Act, which allows political leaders in police custody to contest elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X