அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. ஜிப்மர் மருத்துவமனை விடுமுறையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய கடவுளான ராமர்.. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அயோத்தியில் இப்போது பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், பக்தர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.. ஜன. 22இல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில், நாடு முழுக்க இருந்து பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில்: திங்கள்கிழமை பகல் 12.20 மணிக்கு ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் அயோத்தியில் ரயில்கள், பேருந்துகள் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு சில நாட்களுக்குள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே ஒவ்வொரு 100 மீட்டருக்கும் போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
அரைநாள் விடுமுறை: இப்படி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நாடே தயாராகி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திறப்பு விழாவிற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர்: மேலும், உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளன. அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் திங்கள்கிழமை ஜனவரி 22இல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications