For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தொட்டாலே பங்குகளை மூட வேண்டி வரும்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல் விலை 100ஐ தொட்டால் புதிய சிக்கல் வருமாம்- வீடியோ

    டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விஷம்போல மளமளவென தினமும் ஏறிக்கொண்டுள்ளது.

    கடந்த பல நாட்களாகவே தினமும் பெட்ரோல், டீசல் விலை சில பைசாக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 90யை இன்று தாண்டியுள்ளது. அங்கு ரூ. 90.08க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 82.27, கொல்கத்தாவில் ரூ. 85.54, சென்னையில் ரூ. 85.99க்கும் விற்பனையாகிறது. டீசலை பொறுத்தளவில் மும்பையில் ரூ. 78.58, டெல்லியில் ரூ. 74.02, கொல்கத்தாவில் ரூ. 75.87, சென்னையில் ரூ. 78.26 என்ற விலையில் விற்பனையாகிறது.

    எல்லோருக்கும் கோபம்

    எல்லோருக்கும் கோபம்

    இந்த நிலையில், விரைவிலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மட்டுமின்றி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கடுப்பாகியுள்ளனர்.

    மீட்டர் மாற்றம்

    மீட்டர் மாற்றம்

    பெட்ரோல் போட்டுக்கொள்ளும், பொதுமக்கள் கோபப்படுவது நியாயம், பெட்ரோல் வழங்கும் பங்க் உரிமையாளர்களுக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா? தற்போது நடைமுறையிலுள்ள பெட்ரோல், டீசல் வினியோக மீட்டர்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படும்.

    எத்தனை எண்கள்

    எத்தனை எண்கள்

    மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இப்போது மீட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதுள்ள மீட்டரில் புள்ளிக்கு இடதுபுறம் இரு எண்கள், வலதுபுறம் இரு எண்கள் இடம்பெற முடியும். ஆனால், லிட்டர் 100ஐ தாண்டினால், மீட்டர்களை மாற்றியமைக்க தேவையுள்ளது.

    மீட்டரை மாற்ற வேண்டும்

    மீட்டரை மாற்ற வேண்டும்

    vபெட்ரோல், அல்லது டீசல் விலை லிட்டருக்கு 99.99 ரூபாய் வரை உயர்ந்தால் அப்போது மீட்டரை மாற்ற தேவை இருக்காது. ஆனால், அதற்கு மேல் விலை ஏறினால் மீட்டரை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும். அப்போது சில பெட்ரோல் பங்க்குகளை மூட வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில் மொத்தமாக மீட்டர்களை மாற்றியமைக்க தேவையான நிபுணர்கள் கிடைப்பதில் அப்போது தட்டுப்பாடு ஏற்படும்.

    English summary
    Can petrol pump machines support 3-digit figure if prices are raised above Rs 99.99/litre, experts says no.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X