பார்ரா.. சன்னி லியோன், மான் குட்டி, யானைக் குட்டி.. உ.பி வாக்காளர் பட்டியல்களில் களேபரம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல்களில் சன்னிலியோன், மான் குட்டி, யானை குட்டி என படம் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல்களை மாநில அரசு தயார் செய்து வருகிறது.

Photos Of Sunny Leone, Pigeon & Elephant Found On UPs Voters List For 2019 Elections

இந்நிலையில் பாலியா மாவட்டத்தில் தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியானது. அதில் இரு பக்கங்களில் 51 வயது மூதாட்டியின் பெயரின் பக்கத்தில் அவரது புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோன் படம் இடம்பெற்றிருந்தது.

அது போல் 56 வயது நபரின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் அவரது புகைப்படத்துக்கு பதில் யானையின் படம் இடம்பெற்றிருந்தது. அதுபோல் புறா, மான் ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர்களின் புகைப்படங்களுக்கு பதில் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் பூத் அளவிலான அதிகாரிகள் இந்த பட்டியலுக்கான விவரங்களை அளிப்பர். அந்த விவரங்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் சரி செய்யப்படும்.

இந்த தகவல்களை அதிகாரிகள் சோதனை செய்யும் போது கண்டுப்பிடிக்கப்பட்டு சரி செய்யப்படும். ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை சமீபத்தில் நகர்புறத்திலிருந்து கிராமப்புறத்துக்கு இடமாற்றம் செய்தோம். அதனால் அவர் இதுபோல் குளறுபடி செய்துள்ளார்.

அவர் குறித்து புகார் அளித்துள்ளோம். விரைவில் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+