10 நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய நரேந்திர மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 10 நாள் வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மோடி. வியாழக்கிழமை காலை டெல்லி திரும்பினார்.

கடந்த 12 ஆம் தேதி மியான்மர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு நடந்த ஆசியான் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றார். அத்துடன் மியான்மர் அதிபரையும் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
13ஆம் தேதி மியான்மரில் நடைபெற்ற கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீன பிரதமர் லீ கெகியாங், ரஷ்ய பிரதமர் மெத்வதேவ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்ற நரேந்திர மோடி 14ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார். 15 ஆம் தேதி மாநாட்டில் உரையாற்றிய நரேந்திர மோடி, கருப்பு பண பதுக்கலை தடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று ஜி 20 மாநாட்டில் கருப்பு பண பதுக்கலை தடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆஸ்திரேலிய தலைநர் கான்பெர்ரா சென்ற அவர், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கிருந்து சிட்னி சென்ற நரேந்திர மோடி, இந்தியர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் வீரர்களுடன் பங்கேற்றார். பின்னர் பிஜி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். அங்கு பிஜி நாட்டுடன் 3 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதனைத் தொடர்ந்து தனது 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications