இந்தியாவில் 'நம்பர் ஒன்' கட்சி பாஜக... கேரளாவில் மோடி பெருமிதம் ! #kerala
திருவனந்தபுரம்: இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்ந்து வருவதாக கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாஜக தேசிய நிர்வாக குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: சிறப்பான வரவேற்பு அளித்த பா.ஜ.க, தொண்டர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கேரள மக்கள் நாடுமுழுவதும் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.

கேரளாவை நினைத்தாலே அது கடவுளின் நாடு என்பதுதான் நினைவுக்கு வரும். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து விழா மேடை வரையில் திரண்டிருந்த மக்களைக் கண்டு வியப்படைந்தேன்.
வளைகுடா நாடுகளில் கேரள மக்களின் பங்கு மதிக்கதக்கதாக உள்ளது. அங்கு பணிபுரிபவர்களில் கேரள மக்களே அதிகம். அவர்களை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரள மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.
ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் உயர்வில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. நான் தேர்தல் அரசியலில் நுழையும் முன் பா.ஜ.க,வில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். கட்சி தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் ஒருபோதும் வீணாகிவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications