For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சீனாவின் ட்விட்டர்' வெய்போவில் இணைந்தார் பிரதமர் மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் ட்விட்டர் என அழைக்கப்படுகிற அந்நாட்டின் சமூக வலைதளமான 'வெய்போ'வில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ந் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பயணத்தின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், ஹலோ சீனா! 'வெய்போ' மூலம் சீனா நண்பர்களுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் வெய்போவில் உள்ள தமது முகப்பு பக்கத்தை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து படமாகவும் ட்விட்டரில் போட்டிருக்கிறார். வெய்போவில் பிரதமர் மோடியை மொத்தம் 4,452 பேர் பாலோ செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi has joined Chinese social media platform Weibo. Weibo is often referred to as Twitter of China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X