For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகில் அதிக விலைக்கு ஏலம் போன மோடி கோட் சூட்... கின்னஸ் சாதனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடைக்கு உலகில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட ஆடை என்ற அங்கீகாரத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த விழாவில் பிரதமர் மோடி பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட கோட்-சூட்டினை அணிந்திருந்தார்.

PM Modi’s suit sold for Rs 4.31 crore, enters Guinness Records

அந்த ஆடை முழுவதும் அவரது பெயரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று வடிவமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த ஆடை ஏலத்தில் விடப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் அந்த ஆடையை 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 311 ரூபாய்க்கு குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் துல்சிபாய் படேல் என்பவர் ஏலம் எடுத்தார்.

இதுவே உலகின் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட் ஆடை என்று கின்ன்ஸ் அமைப்பு தற்போது அங்கீகாரம் அளித்துள்ளது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனையை மோடியின் கோட் சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தற்போது இடம்பிடித்துள்ளது. உலக அளவில் இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த உடையும் இதற்குமுன் ஏலம் போனது கிடையாது என்பதால் பிரதமர் மோடி அணிந்திருந்த இந்த கோட்-சூட்டை உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன உடையாக உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

English summary
PM Modi's controversial suit, which he wore during Barack Obama's visit to India in January, has been tagged as the most expensive suit for being sold at a whooping price of Rs. 4.31 crore at an auction held in Surat, Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X