For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவிடம்: பிரதமர் மோடி உறுதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் அவரது வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டிஆர்ஓவில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அப்துல் கலாம் அவர்களை பற்றிய தனது நினைவுகளை கூட்டத்தினரிடையே நினைவு கூர்ந்தார்.

அப்போது பேசிய மோடி. கலாமின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். சொந்த ஊரில் கலாம் அவர்களுக்கு நினைவிடம் கட்ட நிலம் கையெழுக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்படும். அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவராக கலாம் திகழ்ந்தார். அவரது கனவை நினைவாக்குவது தேசத்தின் கடமை என்றார்.

கலாமின் எண்ணங்களை நடைமுறைப்படுத்துவது சவாலானது. ஆனாலும், அவரது எண்ணங்களை நடைமுறைப்படுத்த நாம் உறுதிபூண வேண்டும். கலாமின் வாழ்க்கை, இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minister Narendra Modi today paid tribute to late President Dr APJ Abdul Kalam on his 84th birth anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X