பிரச்சனையை எல்லாம் மறந்து கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி முத்லவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கெஜ்ரிவாலுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
டெல்லி முதல்வர் ஸ்ரீ அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
Spoke to Delhi CM Shri @ArvindKejriwal & wished him on his birthday. My prayers for his long life and good health.
— Narendra Modi (@narendramodi) August 16, 2015 மோடியின் ட்வீட்டுக்கு கெஜ்ரிவால் பதில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
.@narendramodi Thank u so much sir for your wishes. I am touched. I look forward to meeting u soon to brief u on Delhi's situation.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 16, 2015 .@narendramodi வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. டெல்லி நிலைமை குறித்து பேச விரைவில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications