தாயை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி.. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பாச பிணைப்பு!
அகமதாபாத்: குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து ஆசிபெற்றுவந்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான
குஜராத் சென்றுள்ளார். விமான நிலையத்திலிருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற உற்சாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க குஜராத் சென்றுள்ளார்.

குஜராத் தேர்தல்
இந்தியாவில் அடுத்து தேர்தலை சந்திக்கவிருக்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். அதற்கான பிரசாரத்தை இப்போதே மோடி தொடங்கிவிட்டதாக தெரிகிறது. உத்தரப்பிரதேச தேர்தலுக்கு முன்னதாகவே, காசி சென்று தரிசனம் செய்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பிரசாரத்தை தொடங்கினார். அதைப்போலவே குஜராத்திலும் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

பாஜக
குஜராத் பாஜக எம்.எல்.ஏ -க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு பாஜக தலைமையகத்தில் ஓய்வெடுத்தார். 3 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ள குஜராத் பஞ்சாயத்து ராஜின் மகா சம்மேளன கூட்டத்தில் இன்று மாலை அவர் உரையாற்றினார். அத்துடன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

தாயுடன் சந்திப்பு
அதன்பிறகு காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அப்போது தாயார் காலில் விழுந்து ஆசிபெற்றார் பிரதமர் மோடி. இருவரும் சிலமணி நேரங்கள் மனம்விட்டுப் பேசினார்கள். இதையடுத்து, மோடி தனது தாயுடன் இரவு உணவு அருந்தினார்.

ஹீராபென்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காந்தி நகரில் வசித்து வருகிறார். பிரதமர் மோடு குஜராத் வரும்போதெல்லாம், தவறாமல் தனது தாயை சந்தித்து ஆசி பெற்றுச் செல்வார். டெல்லியில் மோடி இருந்தாலும், தாய்க்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கவனித்துக்கொள்கிறார் பிரதமர் மோடி.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்










Click it and Unblock the Notifications