For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு மாற்றம்: பாஜக கடும் எதிர்ப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் கணக்கை மாற்றி அமைத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வெளியிடப்பட்ட ட்வீட்கள் @PMOIndia என்ற கணக்கில் இருந்து @PMOIndiaArchive என்ற கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

மோடி

மோடி

புதிய பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கான @PMOIndiaவில் இருந்து ட்வீட்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் அதை பின்தொடர்பவர்களின்

எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது.

பாஜக

பாஜக

@PMOIndia என்ற ட்விட்டர் கணக்கில் இருந்த ட்வீட்கள் மற்றும் ஃபாலோயர்களை @PMOIndiaArchive என்ற கணக்கிற்கு மாற்றியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சொத்து

தேசிய சொத்து

@PMOIndia என்ற கணக்கு தேசிய சொத்து. அப்படி இருக்கையில் அதை மாற்றியது சட்டவிரோதமானது. @PMOIndia என்ற பெயரில் இரண்டு கணக்குகள்

இருக்கக் கூடாது. @PMOIndia என்ற ட்விட்டர் கணக்கு புதிய அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும். @PMOIndia என்பது ஒன்றும் தனி நபரின் சொத்து அல்ல

என்று பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி தெரிவித்துள்ளார்.

பங்கஜ் பச்சோரி

பங்கஜ் பச்சோரி

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது தொலைத்தொடர்பு ஆலோசகராக இருந்த பங்கஜ் பச்சோரி கூறுகையில், புதிய அரசுக்கு வழிவிடும்

வகையில் தான் @PMOIndia ட்விட்டர் கணக்கு @PMOIndiaArchive என்ற கணக்கிற்கு மாற்றப்பட்டது என்றார்.

English summary
BJP condemned the transferring of the content of Prime Minister's Office Twitter handle from @PMOIndia to @PMOIndiaArchive. It is told that @PMOIndia is vacated for the new government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X