ரூ11,360 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம்: நீரவ் மோடி வீடு உள்ளிட்ட 9 இடங்களில் ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 9 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றப் புகாரில் சிக்கியிருக்கிறார் நீரவ் மோடி. நாடு முழுவதும் இந்த மோசடி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தற்போது நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் நீரவ் மோடி. அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட 9 இடங்களில் இன்று அமலாக்கப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

PNB fraud case: ED conducts raid on 9 locations

குஜராத்தின் சூரத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மும்பையில் உள்ள நீரவ் மோடியின் வீட்டுக்கு சிபிஐ சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Enforcement Directorate (ED) has conducted raids on diamond merchant Nirav Modi properties on Thursday. ED sleuths raided three locations in Surat, four in Mumbai and two in Delhi in connection with Punjab National Bank fraud case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற